Published:Updated:

தீவிரவாதிகளை வேறுபடுத்தி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! -அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

வாஷிங்டன்: தீவிரவாதிகளை வேறுபடுத்தி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றார். அந்நாட்டு சபாநாயகர் பால் ரியான் ஏற்கனவே விடுத்த அழைப்பை ஏற்று அவர் நேற்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்ற சென்றார்.

இதன்மூலம், அக்கூட்டத்தில் உரையாற்றிய 6–வது இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தீவிரவாதிகளை வேறுபடுத்தி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! -அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

அமெரிக்க நாடாளுமன்ற மண்டபத்துக்குள் பிரதமர் மோடி நுழைந்தபோது, அமெரிக்க எம்.பி.க்கள் உற்சாகத்துடன் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அதன்பின் பிரதமர் மோடி, மிகுந்த மரியாதையுடன் மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் மோடி உரையாற்றும்போது, ''அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த சபாநாயகருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வாய்ப்பை அளித்ததன்மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவையும், அதன் 125 கோடி மக்களையும் நீங்கள் கவுரவப்படுத்தி இருக்கிறீர்கள்.

தீவிரவாதிகளை வேறுபடுத்தி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! -அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

அரசியல் சட்டமே எங்களது உண்மையான புனித நூல். அதில், மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அனைத்து குடிமக்களுக்கும் சம அந்தஸ்து ஆகியவை அடிப்படை உரிமைகளாக கூறப்பட்டுள்ளது. சுதந்திரமும், ஜனநாயகமும், சமத்துவமும் நிறைந்த நவீன இந்தியாவை எங்களது முன்னோர்கள் உருவாக்கினர். இன்று, இந்தியா ஒன்றாக வாழ்கிறது, ஒன்றாக வளர்கிறது, ஒன்றாக கொண்டாடுகிறது.

தீவிரவாதிகளை வேறுபடுத்தி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! -அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரை

இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த கால முட்டுக்கட்டைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, வருங்காலத்துக்கான அடித்தளத்தை உறுதியுடன் அமைக்க வேண்டும். நாம் தீவிரவாதத்தை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். தீவிரவாதத்தை முறியடிக்க ராணுவம், உளவுத்துறை ஆகியவை மட்டும் போதாது.

எல்லா தீவிரவாத இயக்கங்களுமே வெறுப்பை தூண்டுதல், கொலை செய்தல், வன்முறை என்ற ஒரே கொள்கையை கொண்டுள்ளன. எனவே, நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று வேறுபடுத்தி பார்க்காமல், அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாதத்தின் நிழல் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், இந்தியாவின் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) தீவிரவாதம் ஊட்டி வளர்க்கப்படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக தீவிரவாதத்தை போதிக்கும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்காக இந்த நாடாளுமன்றத்தை நான் பாராட்டுகிறேன். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பவர்களை நாம் தனிமைப்படுத்த வேண்டும்" என்றார்