Published:Updated:

எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்

எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்
எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்

எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்

எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்

துபாய்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது திடீரென தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், 226 இந்தியர்கள் உள்பட 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 2003–ம் ஆண்டு முதல் விமானங்களை இயக்கி வருகிறது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி) துபாயை வந்தடையும்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் 777 ரக விமானம் 282 பயணிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் 18 பேர் என மொத்தம் 300 பேரை ஏற்றிக் கொண்டு காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின் அந்த விமானம் துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விமானத்தின் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க திட்டமிட்டார்கள். இதைத் தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் மற்றும் ஓடுபாதைக்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுகள் விரைந்தன.

எமிரேட்ஸ் விமானம்... தரையிறங்கும் போது விபத்து! 300 பேர் உயிர் தப்பினர்

இதையடுத்து அந்த விமானத்தின் விமானிகள், பயணிகள் அனைவருக்கும் அவசரகால வழியை பயன்படுத்தி எப்படி வெளியேறுவது என்பது குறித்து விமான பணிப்பெண்கள் மூலம் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், விமானத்தை விமானிகள் சாதுர்யமாக இயக்கி, விமான நிலையத்தை நெருங்கி வந்து விட்டனர். விமானத்தின் முன்பகுதி சக்கரம் தீப்பிடித்து எரிவதை ஓடுதளத்தில் இருந்த மீட்புப் படையினர் கவனித்தனர். ஓடுதளத்தில் விமானம் தரை இறங்கியபோது, விமானத்தின் பின் பக்க சக்கரங்கள் தரையை முதலில் தொட்டன.

அதன் பின்னர் விமானத்தின் வேகம் உடனடியாக குறைக்கப்பட்டு முன் சக்கரத்தை இயக்க விமானிகள் முற்பட்டபோது அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. இதை அடுத்து பலத்த சத்தத்துடன் விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி வெடித்தது. இதனால் விமானம் வேகமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.

அதே நேரத்தில், விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட 300 பேரையும் அவசரகால வழிகள் மூலம் பத்திரமாக வெளியேற்றினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனாலும், 10 பேர் மூச்சு திணறல் மற்றும் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பினார்கள். படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு