Published:Updated:

ரஷிய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி!

ரஷிய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி!
ரஷிய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி!
ரஷிய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி!

மாஸ்கோ: ரஷிய அதிபர் பதவிக்கான தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடின் வெற்றி பெற்றார்.

ஐக்கிய ரஷிய கட்சி சார்பில் போட்டியிட்டு, மூன்றாவது முறையாக ரஷிய அதிபராகும் புடின், இதுவரை எண்ணப்பட்ட 85 சதவீத வாக்குகளில் 62 சதவீதத்தை வசப்படுத்தியதாக, அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இரண்டாம் இடத்தை வகித்துள்ள கம்யூனிஸ்ட் தலைவர் கெக்கனி ஜியூகனொவ் 17 சதவீத வாக்குகளையும், ஏனைய 3 வேட்பாளர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றனர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புடினுக்கு, உலக நாடுகளின் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

ரஷிய அதிபராக ஒருவர் தொடர்ந்து 3-வது முறை பதவி வகிக்க முடியாது. எனவே இதற்கு முன் நடந்த தேர்தலில் தனது நம்பிக்கைக்குரிய மெத்வதேவை அதிபர் ஆக்கினார் புடின். பின்னர் பிரதமர் பதவி வகித்த அவர், இப்போது இடைவெளிக்குப் பின் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றுள்ளார்.

இதனிடையே, இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் வன்முறைச் சம்பங்கள் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, 3,000-க்கும் மேலான புகார்கள் குவிந்துள்ளது.

வாக்குப் பதிவின்போது புடின் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தேர்தல் பார்வையாளர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டியிருந்ததும் கவனத்துக்குரியது.

முன்னதாக, கடந்த டிசம்பரில் நடைபெற்ற ரஷிய நாடாளுமன்றத் தேர்தலில் புடின் கட்சியினர் தில்லுமுல்லு செய்து வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. புடினைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டனப் பேரணிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.