Published:Updated:

மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

Published:Updated:
மன்னர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை’ - தாய்லாந்து மன்னர் வாழ்வும், மரணமும்...! #Bhumibol

டந்த எழுபது ஆண்டுகளில் முதல்முறையாக தனது தந்தை இல்லாமல் கண்விழித்துள்ளது தாய்லாந்து. 70 ஆண்டுகளாக தாய்லாந்து மன்னராக இருந்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பெருமைக்குரிய பூமிபோல் அடுல்யதேஜ், உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

மன்னராட்சி டூ புரட்சி

ஆசிய நாடான தாய்லாந்து ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும், நாட்டின் தலைவராக மரபுவழி மன்னர் இருப்பார். 1932-ம் ஆண்டு வரை தாய்லாந்து மன்னர்களின் முழு கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. மன்னர் ஆட்சிக்கு எதிராக உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட அழுத்தங்ளால், தாய்லாந்தை ஆண்டு வந்த ஏழாவது மன்னர் பிரஜதிப்போக்கிற்கு எதிராக 1932-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ராணுவவீரர்கள் மற்றும் தாய்லாந்தில் ஜனநாயகத்தை விரும்பும் அறிவுஜீவிகளின் ஒற்றுமையால், ஒரு நூற்றாண்டை ஆண்டுவந்த முடியாட்சி தூக்கி எறியப்பட்டது. அதன்பிறகு மன்னர் குடும்பங்கள் வெளிநாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

18 வயது மன்னர்

1945-ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தாய்லாந்தின் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டதால், தாய்லாந்தில் மீண்டும் முடியாட்சி எற்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதுவரை சுவிட்சர்லாந்தில் வசித்துக் கொண்டிருந்த பூமிபோல் குடும்பத்தினர் மீண்டும் தாய்லாந்துக்குத் திரும்பினர்.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பிரஜதிப்போக்குக்கு அடுத்த இடத்தை, பூபிபோலின் அண்ணன் ஆனந்த மாஹிடோல் கைப்பற்றி எட்டாவது மன்னராக முடிசூடிக்கொண்டார். 1946-ம் ஆண்டு எட்டாவது மன்னர் ஆனந்த மாஹிடோல் அவரது அறையில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யார் என்பதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை. இதனால், தனது 18-வது வயதில் பூமிபோல் அடுல்யதேஜ் தாய்லாந்தின் ஒன்பதாவது மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு 1946 முதல் 2016 வரை 70 ஆண்டுகள் நாட்டின் தலைவராக பூமிபோல் இருந்து வந்துள்ளார்.

தாய்லாந்தின் எதிர்காலம்

1946-ம் ஆண்டு பூமிபோல் மன்னராகப் பதவி ஏற்றிருந்த நேரத்தில் ஜனநாயக அரசியலா? ராணுவ ஆட்சியா? என எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பதில் தாய்லாந்து இருந்தது. ராணுவ ஆட்சியைக் கேட்டவர்கள் மன்னரே தேவை இல்லை என போர்கோடி தூக்கினார்கள். இந்த சூழ்நிலையில் பூமிபோல் தலைமையிலான அரச பிரபுத்துவ உறுப்பினர்கள், மன்னரை மையமாகக் கொண்ட ஜனநாயக அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள். பூமிபோலின் இந்தத் திட்டம் தாய்லாந்தின் எதிர்கால ஜனநாயக அரசியலைத் தீர்மானித்தது. கொடுங்கோல் மன்னர்கள் என்ற பதத்தில் இருந்து மாறுபட்டு ஜனநாயக மன்னராக பூமிபோல் செயல்பட்டதால் மக்களில் நன்மதிப்பைப் பெற்றார்.

புகழ்கொடுத்த புத்தமதம்

பூமிபோலின் ஆட்சியின் முதல் ஏழு ஆண்டுகள் தாய்லாந்தில் ராணுவத்தின் சர்வாதிகாரம் மேலோங்கி இருந்தது. அடக்கு முறைகளை மீறி 1950-களில் பூமிபோல், நாட்டின் குக்கிராமங்களுக்கும் பயணம் செய்து கிராம மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கிராமப்புறங்களில் அடிக்கடி உள்ளூர் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த அவரது அணுகுமுறை, அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. தாய்லாந்து சமுதாயம் மத மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளில் ஆழ்ந்து ஊறிய சமூகமாகும். பூமிபோல் நாட்டின் முக்கிய கோயில்களுக்குச் சென்று, விழாக்களில் தலைமை தாங்கி தன்னை புத்தமத நம்பிக்கையின் பாதுகாலவராக முன்நிறுத்திக் கொண்டார். தாய்லாந்தை விவசாயத்தில் இருந்து கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்குத் திருப்பி, ஒரு நவீன வளர்ந்து வரும் நாடாக மாற்றிக் காட்டினார் பூமிபோல்.

12  முறை ஆட்சி கவிழ்ப்பு

1932 முதல், தாய்லாந்தில் 19 முறை ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஈடுபட்டுள்ளது. அதில் 12 முறை வெற்றியும் கண்டுள்ளனர். இதனால், பூமிபோல் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுவதை மறுக்கமுடியாது. 1957 முதல் 90 வரை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு பூமிபோல் உற்ற நண்பனாக இருந்தார் . ஜனநாயக ரீதியில் வெற்றிபெற்ற பிரதமரான தக்சின் ஆட்சிக்கு எதிராக 2006 நடந்த ராணுவ சதிக்கும் மன்னர் பூமிபோல் அனுமதி அளித்தது வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக அமைந்தது. தாய்லாந்து அரசியலமைப்புச் சட்டப்படி மன்னருக்கு குறைந்த அதிகாரங்களே இருப்பதால், தனது முடியாட்சியை காப்பாற்றிக்கொள்ள சர்வாதிகார ஆட்சிக்கு அவர் தோள் கொடுத்ததாகவும் ஜனநாயகவாதிகள் சாடுகின்றனர்.

ராஜாக்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை

ஒருபக்கம் மக்களின் நண்பன், மறுபக்கம் சர்வாதிகாரிகளுக்கு நண்பன் என மன்னருக்கு டபுள் ரோல் இருந்தாலும், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த புகழுக்கு எந்த பங்கமும் வரவில்லை. 'நவீன தாய்லாந்தின் தந்தை, தாய் மக்களில் கடவுள்' என வெவ்வேறு அடைமொழிகளில் மக்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

''ராஜாக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அல்லது ராஜா போல மகிழ்ச்சியாக இரு என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மை இல்லை''- கடைசி காலக்கட்டத்தில் ஒரு கூட்டத்தில் பூமிபோல் பேசியது இது. எவ்வளவு ஆழமான வார்த்தைகள்..

- ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism