Published:Updated:

1969 முதல் 2020 வரை - இந்தியாவுக்கு வந்த 6 அமெரிக்க அதிபர்கள்! #VikatanInfographics

இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர்கள்
இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர்கள்

இதுவரை அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் 7 முறை அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிப்ரவரி 24, 25 ஆகிய இருநாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த வேளையில், அவருடன் அணிவகுத்துச் செல்லக்கூடிய பாதுகாப்பு வாகனங்கள் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் பிப்ரவரி 18-ம் தேதி காலை அகமதாபாத் வந்தடைந்தன. மனைவி மெலானியாவுடன் வருகிற ட்ரம்ப், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியபின், அகமதாபாத்தில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில், கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தைத் திறந்து வைக்கிறார்.

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்
புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்

இதுவரை அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் ஏழு முறை அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். அதில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும், நரேந்திர மோடி பிரதமராக இருந்தபோதும் அதிபர் பராக் ஒபாமா மட்டுமே இரண்டு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் 34-வது அதிபராக இருந்த டுவைட் டி. ஐசனாவர்தான் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர். அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோரைச் சந்தித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 1969-ம் ஆண்டு அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகைபுரிந்து, பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஜனாதிபதி முகமது ஹிதயதுல்லா ஆகியோரைச் சந்தித்தார்.

1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்தார். 2000-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியா வந்தார். அப்போது, கே.ஆர். நாராயணன் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து, 2006-ல் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்துள்ளார். 2010-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். 2015-ல், நரேந்திர மோடி பிரதமராக இருந்தார். தற்போது 2020-ல் அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வரும் ஏழாவது அதிபராவார்.

உயரம் அதிகமான அதிபர்கள்!
உயரம் அதிகமான அதிபர்கள்!

அமெரிக்க அதிபர்களில் இதுவரை உயரமான அதிபர் என்ற பெயரை எடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். இவர் 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். இவருக்கு அடுத்தபடியாக அதிபர் லிண்டன் பி. ஜான்சன் 6 அடி 3.5 அங்குலம் உயரம் கொண்டவர். உயரமான அதிபர்கள் பட்டியலில் டொனால்டு ட்ரம்ப் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 6 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர். அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் (6.25 அடி) நான்காவது இடத்திலும், அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் (6.2 அடி) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

போயிங் 757 கதவுகள், செல்லப் பெயர் கப்பல்.. ஆனால் இது ட்ரம்ப்பின் பீஸ்ட் கார்! #VikatanInfographics
உயரம் குறைவான அதிபர்கள்!
உயரம் குறைவான அதிபர்கள்!

அதேபோல், உயரம் குறைவான அதிபர்களின் பட்டியலில் அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மாடிசன் முதலிடத்தில் உள்ளார். இவர் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். பெஞ்சமின் ஹாரிசன் (5.6 அடி), மார்ட்டின் வான் பியூரன் (5.6 அடி), வில்லியம் மெக்கின்லி (5.7 அடி), ஜான் ஆடம்ஸ் (5.7 அடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் உயரம்
5 அடி 5 அங்குலம்.
Modi - Trump
Modi - Trump
இது விமானமல்ல, பறக்கும் வெள்ளை மாளிகை... இந்தியா வரும் ட்ரம்ப்பின் 3 மாடி போயிங்747 #VikatanInfographics

அமெரிக்காவில் பிரதமர்களைப் போலவே அவர்களின் மனைவிகளையும், அமெரிக்காவின் `முதல் பெண்' என்று அழைக்கப்பட்டு மரியாதை கொடுக்கப்படும்.

Trump - Melania Trump
Trump - Melania Trump

அதிபரின் மனைவிகளில் மிகவும் உயரமானவராக இருப்பவர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்தான். இவர் 5 அடி 9 அங்குலம் உயரம்.

அடுத்த கட்டுரைக்கு