Published:Updated:

ஷூவுக்குள் மறைந்திருந்த தேள் கடித்ததில் 7 முறை ஹார்ட் அட்டாக்; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!

தேள் ( கோப்புப் படம் )

பிரேசிலில், ஷூவுக்குள் மறைந்திருந்த மஞ்சள் நிற தேள் கடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷூவுக்குள் மறைந்திருந்த தேள் கடித்ததில் 7 முறை ஹார்ட் அட்டாக்; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!

பிரேசிலில், ஷூவுக்குள் மறைந்திருந்த மஞ்சள் நிற தேள் கடித்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தேள் ( கோப்புப் படம் )

எப்போதும் ஆடை மற்றும் காலணிகளை போட்டுக்கொள்ளும்போது முதலில் நன்றாக உதறிவிட்டு அதனுள் எதாவது இருக்கிறதா எனப் பார்த்துவிட்டுப் போட்டுக்கொள்வது நமக்கு நல்லது. ஏனெனில், சில சமயங்களில் விஷப்பூச்சிகள், தேள், பாம்பு போன்றவை அதனுள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, மழைக்காலங்களில் நாம் எப்போதும் இருப்பதைவிடக் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் பிரேசிலில், ஷூவுக்குள் மறைந்திருந்த மஞ்சள் நிற தேள் கடித்ததில் ஏழு முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷூவுக்குள் மறைந்திருந்த தேள் கடித்ததில் 7 முறை ஹார்ட் அட்டாக்; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!
சித்திரிப்புப் படம்

கடந்த அக்டோபர் 23-ம் தேதி சிறுவன் முதலில் தன் குடும்பத்தினருடன் வெளியே கிளம்புவதற்குத் தயாராகிக்கொண்டிருந்திருந்தான். சிறுவன் தன்னுடைய ஷூவை எடுத்து போட்டுக்கொண்டிருந்தபோது, அதனுள்ளிருந்து ஏதோ சிறுவனின் காலை கடித்திருக்கிறது. வலியால் துடித்த சிறுவன் சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்திருக்கிறான். அதையடுத்து ஷூவுக்குள் அப்படி என்ன இருந்தது எனப் பெற்றோர் பார்க்கையில், டிடியஸ் செர்ருலட்டஸ் (Tityus Serrulatus) என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற தேள் அதனுள் இருந்தது தெரியவந்திருக்கிறது.

தேள்
தேள்

பின்னர் பெற்றோர் உடனடியாக, மயக்கமடைந்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். தொடர்ந்து இரண்டு நாள்கள் சிகிச்சையிலிருந்த சிறுவன் துரதிர்ஷ்டவசமாக ஏழு முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து கண்ணீர்மல்கப் பேசிய சிறுவனின் தாயார், ``என்ன நடந்தது என்று நான் அவனைப் பார்க்க அறைக்குள் நுழைந்தபோது, ​​நான் என் கையை அவன் தலையில் வைத்து, முழு மனதுடன் அவனுடைய உண்மையான உரிமையாளரிடம் கொடுத்தேன். ஆண்டவரே, அவன் உன்னுடையவன். அவனை உம்முடன் அழைத்துச் சென்று கவனித்துக்கொள்ளுங்கள். உமது சித்தம் நிறைவேறட்டும்" என்றார்.