Published:Updated:

பாகிஸ்தான் பிரதமராக விருப்பம்: மலாலா

Vikatan Correspondent
பாகிஸ்தான் பிரதமராக விருப்பம்: மலாலா
பாகிஸ்தான் பிரதமராக விருப்பம்: மலாலா

பாகிஸ்தான் பிரதமராக விருப்புவதாக பெண்கள் கல்வி ஆர்வலருமான மலாலா கூறினார்.

மிகக் குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பாகிஸ்தானின் பெண்கள் கல்வி ஆர்வலருமான மலாலா யூசூப்சாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 'எதிர்காலத்தில் முதலீடு' என்ற கருத்தரங்களில் பங்கேற்று பேசினார். அப்போது, உலக அமைதி, கல்வி, பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், தான் பாகிஸ்தான் பிரதமராக விருப்பமுள்ளதாகவும் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமராக விருப்பம்: மலாலா

இது பற்றி மலாலா, 'பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக, விண்வெளி நிபுணர்களாக, கலைஞர்களாக, என தலைமைத்துவ பண்புள்ள வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என கேள்விப்பட்டேன். இதனால், நான் டாக்டராக வேண்டுமென்ற ஆசை மாறியது. பாகிஸ்தானின் பிரதமராக வேண்டுமென்று எண்ணத்தை விதைத்தது. நான் பிரதமரானால், பாகிஸ்தானில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். கல்வியை என் மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வேன்' என்று பேசினார்.