Published:Updated:

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளின் பெயர்களை வெளியிட்டது சீனா

Vikatan Correspondent

பீஜிங்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 தீவிரவாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ள சீனா, இத்தீவிரவாதிகளின் நிதி ஆதாரங்கள்  மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக சீன பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இத்தீவிரவாதிகள் கிழக்கு  துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் என தெரிவித்துள்ளது.
 
சீனாவிற்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீவிரவாத செயல்களை ஏற்பாடு செய்தல், திட்டமிடுதல் மற்றும்  செயல்படுத்துதல் உள்ளிட்ட தீவிரவாத செயல்களை பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் செய்து வந்துள்ளதாக அதில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பு எனும் இத்தீவிரவாத அமைப்பு சீனாவில் வசிக்கும் தங்கள் உறுப்பினர்களிடையே  பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் பிரசாரம் செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்:ளது.

இத்தீவிரவாதிகள் கடந்த வருடம் ஸின்ஜியான்ங்  பகுதியில் அமைந்துள்ள காஸ்கரில் விடுதி ஒன்றில் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் தீவிரவாத  குழுக்கள் சீனாவின் ஸின்ஜியான்ங் பகுதியில் நுழையும் முன்பு கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள்  பாகிஸ்தானில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் தயாரிக்க பயிற்சி பெற்றது தெரிய வந்ததாகவும் அதில் மேலும்  குறிப்பிடபட்டுள்ளது.