Published:Updated:

இலங்கையில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு!

Vikatan Correspondent

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம்  தெரியாத கும்பல் உடைத்தெறிந்ததைத் தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு நகரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் சுமார் அறுபது வருடங்களுக்கு  முன்னர் மகாத்மா காந்தி மற்றும் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்ப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த சிலைகள் வியாழக்கிழமை இரவுக்கு பின்னர் உடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பின் கடந்த காலங்களில் அகிம்சை போராட்டங்களின் முக்கிய இடமாக திகழ்ந்து வந்ததுடன் மகாத்மா காந்தியின்  அகிம்சை போராட்டத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.

அத்துடன் பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் நடைபெற்று வரும் நிலையில்,  அதுவும்  உடைக்கப்பட்டுள்ளது.

இரு சிலைகளின் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டு கிடந்ததைத் தொடர்ந்து, அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.இதனையடுத்து  அங்கு போலீசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.