Published:Updated:

’பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை விபத்து ஐஎஸ் சதி”

Vikatan Correspondent
’பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை விபத்து ஐஎஸ் சதி”
’பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை விபத்து ஐஎஸ் சதி”
’பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை விபத்து ஐஎஸ் சதி”

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கான கடைகள் போடப்பட்டிருந்தது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென ஒரு லாரி  அதிவேகமாக கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் 12 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக  ஆங்கில பத்திரிக்கை Washington Times செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், இதே போன்று லாரியை கூட்டத்துக்குள் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் நைஸ் என்னும் பிரஞ்சு கடலோர நகரத்தில் அரங்கேறியது. 84 பேரை பலி வாங்கிய அந்த லாரி ஓட்டுநர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று பெர்லின் நகரில் நடந்த விபத்தும் இதே பாணியில் இருப்பதால் ஐஎஸ் கைவரிசை என்னும் சந்தேகம் வலுத்துள்ளது.