Published:Updated:

பொருளாதாரத்தில் இங்கிலாந்தை முந்திய இந்தியா..!

Vikatan Correspondent
பொருளாதாரத்தில் இங்கிலாந்தை முந்திய இந்தியா..!
பொருளாதாரத்தில் இங்கிலாந்தை முந்திய இந்தியா..!
பொருளாதாரத்தில் இங்கிலாந்தை முந்திய இந்தியா..!

இங்கிலாந்தின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் மதிப்புமிக்கதாக மாறியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. இந்த வெளியேற்றத்துக்குப் பின், இங்கிலாந்து நாட்டின் கரன்சியான 'பவுண்ட்' மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. 

2016-ல் இங்கிலாந்தின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மதிப்பு 2.29 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கிறது. அதுவே இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு 2.30 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். இந்த காரணத்தால் தான், இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா இங்கிலாந்தின் பொருளாதாரத்தை முந்தியுள்ளது. 

'இங்கிலாந்தை ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள் தொகை பன்மடங்கு இருந்தாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை தான். அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்து தற்போது இந்தியா தான் மிகப்பெரும் பொருளாதார நாடாக இருக்கிறது.' என்று இந்த விஷயத்தைப் பற்றி பெருமிதப்பட்டார் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.