Published:Updated:

மார்க் சக்கர்பெர்க் வீட்டில் 'ஜார்விஸ்'..!

Vikatan Correspondent
மார்க் சக்கர்பெர்க்  வீட்டில் 'ஜார்விஸ்'..!
மார்க் சக்கர்பெர்க் வீட்டில் 'ஜார்விஸ்'..!
மார்க் சக்கர்பெர்க்  வீட்டில் 'ஜார்விஸ்'..!

ஹாலிவுட்டின் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்த 'Iron Man' படத்தில் அவருக்கு உதவியாளராக வரும் ரோபோவுக்கு பெயர் 'ஜார்விஸ்'. தற்போது ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் அவரது வீட்டில் பணிவிடை செய்வதற்காக 'ஜார்விஸ்' என்ற புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளார். இந்த மென்பொருளை அவரது வீட்டு உபயோகப் பொருட்களில் இணைத்து இருக்கிறார்கள். இந்த மென்பொருளை அவரது ஃபோனின் மூலம் அல்லது கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தும்படி வடிவமைத்துள்ளாராம் மார்க்.

இது பற்றி ஃபேஸ்புக்கில் மார்க் அவரது முகப்புப் பக்கத்தில்,'நான் நினைத்ததைவிட 'ஜார்விஸ்-ஐ' உருவாக்குவது சுலபமாகவே இருந்தது.' என்று பதிவிட்டுள்ளார்.