Published:Updated:

வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கண்டன தீர்மானம்

Vikatan Correspondent

நியூயார்க்:ராக்கெட் ஏவிய விவகாரம் தொடர்பாக வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு  சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா  கடந்த வெள்ளிக்கிழமை ராக்கெட் ஏவி சோதனை நடத்தியது. ஆனால் சில  நிமிடங்களிலேயே அது நொறுங்கி கடலில் விழுந்தது.

இதன் மூலம் வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை புறக்கணித்து  விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில்,இது தொடர்பாக வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபையில்  நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.வடகொரியா தொடர்ந்து இதே நடவடிக்கையில்  இறங்கினால் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிககை  விடப்பட்டுள்ளது.