Published:Updated:

ஐ.டி. நிறுவனங்கள்:பிரிட்டனுக்கு இந்தியா எச்சரிக்கை

Vikatan Correspondent
ஐ.டி. நிறுவனங்கள்:பிரிட்டனுக்கு  இந்தியா எச்சரிக்கை
ஐ.டி. நிறுவனங்கள்:பிரிட்டனுக்கு இந்தியா எச்சரிக்கை

லண்டன்:

ஐ.டி. நிறுவனங்கள்:பிரிட்டனுக்கு  இந்தியா எச்சரிக்கை

பிரிட்டனிலுள்ள எங்களது முக்கிய ஐ.டி. நிறுவனங்களை ஐரோப்பாவின் வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு மாற்றிவிடுவோம் என்று பிரிட்டனை இந்தியா எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய ஐ.டி. நிறுவன பணியாளர்களை பாதிக்கும் வகையில் பிரிட்டன் கொண்டுவந்துள்ள கடுமையான விசா விதிகளை சுட்டிக்காட்டியே இந்தியா  எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா,பிரிட்டன் தொழில்துறை செயலர் வின்ஸ் கேபிளை சந்தித்துப்  பேசினார்.

அப்ப்போது பிரிட்டன் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய  சர்மா, மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

அப்போது,பிரிட்டனில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள்  பணியாளர்களை  கம்பெனிக்குள்ளாக இடமாற்றம் செய்துகொள்ளும் விதிமுறைகளில் அடுத்த  இரண்டாண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று இங்கிலாந்து அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.