Published:Updated:

சமாதானம் பற்றி உரையாற்ற சுப்ரமணியம் சுவாமிக்கு இலங்கை அழைப்பு

Vikatan Correspondent
சமாதானம் பற்றி உரையாற்ற சுப்ரமணியம் சுவாமிக்கு இலங்கை அழைப்பு
சமாதானம் பற்றி உரையாற்ற சுப்ரமணியம் சுவாமிக்கு இலங்கை அழைப்பு
சமாதானம் பற்றி உரையாற்ற சுப்ரமணியம் சுவாமிக்கு இலங்கை அழைப்பு

கொழும்பு:சமாதானம் பற்றி உரையாற்ற வருமாறு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம்  சுவாமிக்கு இலங்கை இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் சமாதானம் பற்றி  விரைவுரையாற்ற வருமாறு இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, சுப்ரமணியம்  சுவாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான எழுத்து மூலமான அழைப்பு ஒன்று சுப்ரமணியம் சுவாமிக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. எனினும், சுப்ரமணியம் சுவாமி அழைப்பை ஏற்றுக் கொண்டாரா,  இலங்கையில் உரையாற்றுவாரா என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை.