Published:Updated:

'லவ்வபிள் மதர்’ - நாயின் அன்பால் நெகிழ்ந்த இணையம் (வீடியோ)

'லவ்வபிள் மதர்’ - நாயின் அன்பால் நெகிழ்ந்த இணையம் (வீடியோ)
'லவ்வபிள் மதர்’ - நாயின் அன்பால் நெகிழ்ந்த இணையம் (வீடியோ)

'லவ்வபிள் மதர்’ - நாயின் அன்பால் நெகிழ்ந்த இணையம் (வீடியோ)

தெரு நாய்களை அடிக்க ஓடுகிறோம். கல் எடுத்து வீசுகிறோம். ரோட்டில் அலையும் மனிதர்களுக்கு மத்தியில் எத்தனையோ இன்னல்களைத் தாண்டி தெருநாய்களும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றன. அதுவும் குட்டிகள் பிறந்து விட்டால், நாய்கள் அவற்றை வளர்க்க பெரும் பாடுதான் படுகின்றன. ஒரு நாய் மனிதனைக் கடித்தால் வெறி கொண்டு 100 நாய்களை கொல்வது மனிதனின் குணம் . ஆனால், ஒரு முறை பசியாற்றினால் கூட வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் பார்ப்பது நாய்களின் குணம்.  நாய்களை கற்களைக் கொண்டு தாக்குவதற்கு முன், ஒரு முறை அவற்றுக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைத்து பாருங்கள்' என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வரும். தாய்மை ஸ்தானம் அடையும் போது மனிதன், விலங்குகளுக்குகிடையே எந்த பேதமும் இல்லை. அம்மா என்றால் அன்பு என்றாகி விடுகிறது. 

குட்டிகள் பிறந்து விட்டால்,   ஒவ்வொரு விலங்கினத்திடமுமே மாற்றத்தை காண முடியும். தனக்காக வாழாமல் குட்டிகளுக்காக வாழத் தொடங்கி விடும். அங்கே ஓடுவதும் இங்கே ஓடுவதுமாக இருக்கும். குட்டிகளுக்கும் சேர்த்து இரை தேட வேண்டுமே. அதனால், அவற்றின் பொறுப்பு அதிகரித்துவிடும். பால் குடி மாறிய குட்டிகளை வளர்ப்பதற்கு எல்லா விலங்குகளுமே மனிதர்களைப் போலவேத்தான் கஷ்டப்பட்டுகின்றன. 

சிங்கம் தனது குட்டிகளுக்கும் சேர்த்து கூடுதலாக உணவு வேட்டையாட வேண்டும். யானை குட்டியின் வயிறு நிரம்புவதற்காக பல சதுர அடி தொலைவு நடக்கத் தொடங்கும். இப்படி ஒவ்வொரு விலங்கினங்களுமே தாய்மை ஸ்தானத்தை அடையும் போது தங்களின் பசியை மறந்து விடுகின்றன. குட்டிகளின் பசி மட்டும்தான் அவற்றின் மனதில் நிற்கிறது. தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், தெரு நாய் ஒன்றிற்கு ஒருவர் கிரில் சிக்கன் வழங்குகிறார்.  அதன் கண்களில் ஒரு பரிதாபம் தெரிகிறது. கிரில் சிக்கனை வாயில் கவ்விக் கொண்டதும் அந்த நாய் எங்கேயோ ஓடுகிறது. வழக்கமாக பசியில் இருக்கும் நாய்கள் உணவிட்டால், லபக் லபக் என்று சாப்பிட்டு விடும். ஆனால் இந்த நாய் சற்று வித்தியாசமாக ஓடத் தொடங்கியதால், அந்த நபரும் நாயின் பின்னாலேயே ஓடுகிறார். அத்துடன் நாயின் செயலையும் வீடியோவாக பதிவு செய்து கொள்கிறார். 

சில நிமிடங்கள் ஓடிய அந்த தெரு நாய் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் நின்று விடுகிறது.  ஒரு இடத்தில் இருநது சில நாய்க்குட்டிகள் அந்த நாயை நோக்கி ஓடி வருகின்றன. அவைகள் பெரும் பசியுடன் இருக்கின்றன. வாயில் கொண்டு வந்த சிக்கனை தனது குட்டிகளின் முன் போடுகிறது தாய் நாய். ஆனால், ஒரு குட்டிக்கு கூட அந்த சிக்கன் போதாது. உணவு குறைவாக இருந்தாலும் அந்த தாய் நாயின் அன்புதானே பெரியது. தெருநாய்கள் அவற்றின் குழந்தைகளை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதை இந்த வீடியோ விளக்குகிறது,

இந்த நிகழ்வை படம் பிடித்த நபர் அதனை இணையத்தில் வெளியிட்டார். இணையத்தில் வைரலாகியது. லட்சக்கணக்கானோர் அதனை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனார்கள். 'அப்படி ஒரு லவ்வபிள் அம்மா எங்கேயிருக்காங்க.. ' என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். பலர் குட்டிகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

-எம். குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு