Published:Updated:

91 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது..!

Vikatan Correspondent
91 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது..!
91 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது..!
91 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது..!

ரஷ்யாவிலிருந்து 91 நபர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட விமான  திடீரென்று காணாமல் போனது.தற்போது. அந்த  ராணுவ விமானம் பிளாக்-சீ கருங்கடலில் (Black sea) பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை ரஷ்யாவின் சோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டது Tu-154 ரக ராணுவ விமானம். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. இப்படி மறைந்த விமானம், சோச்சி பகுதியின் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் விழுந்து நொறுங்கி உள்ளது. அதன் பாகங்களை ரஷ்ய மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த விமானம் சிரியாவுக்கு செல்வதாக இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்பது பற்றி தகவல் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.