Published:Updated:

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?' நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?'  நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

லக நாடுகள் அனைத்தும் 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் நாள், இங்கிலாந்தை உற்று நோக்கியபடி இருந்தன. காரணம், அன்றைய தினம்தான் இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டிக்கொண்டார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. இங்கிலாந்து எப்படி இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரப்போகிறது? என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அனைத்து மக்களின் எண்ணமும் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த ஒரு செய்தி மட்டும் உலக நாடுகளை இங்கிலாந்து பக்கம் திரும்பச் செய்யவில்லை. ராணி முடிசூட்டிக் கொள்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒருதகவல் வந்தது. உலகத்தில் யாராலும் முடியாது என்றெண்ணிய, நம்பவும் முடியாமல், அதே நேரத்தில் நம்பி ஆக வேண்டிய செய்தி அது. "மலைகளின் முடிசூடா ராணியான எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து விட்டார் எட்மண்ட் ஹிலரி" என்பதுதான். ஆம்... பிரிட்டிஷ் காமன்வெல்த் உறுப்பு நாடாக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலரியும், நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கேவும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து விட்டார்கள் என்று உலகமே வியந்து பாராட்டியது. எவரெஸ்ட் சிகர உச்சியை முதன்முதலில் சென்றடைந்த எட்மண்ட் ஹிலரியின் நினைவு தினம் இன்று....

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?'  நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இது என்ன பெரிய இமாலய சாதனையா?" என்று பொதுவாக நாம் அடிக்கடி கேலியாகச் சொல்வோம். எவரஸ்ட் உச்சியைச் சென்றடைவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா என்ன? இமாலயம் என்ற பெயரை உச்சரித்தாலே உடம்புக்குள் பனி ஊடுருவும். 8,848 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரத்தை செங்குத்தாக நிறுத்தி அதன்மேல் ஏறிச் செல்வதுபோல, அதுவும் சாதாரணமான சூழ்நிலையில் அல்ல... பல ஆயிரம் கிலோமீட்டர் வரை பனி படர்ந்த பாலைவனம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களையே பார்க்க முடியாது. குறைந்தபட்சம் - 30 டிகிரியிலிருந்து - 60 டிகிரி செல்சியஸ் வரை தட்பநிலை இருக்கும். இந்த இடத்தை இதுவரை போர் விமானங்கள்கூட எட்டிப்பார்த்தது கிடையாது. நாம் அணிந்திருக்கும் உடையில் நமக்கு தெரியாமல் எங்கேனும் சிறு ஓட்டைகள் இருந்தால் கூட, அதுவே நமக்கு எமனாக மாறிவிடும் அபாயம். சிறிது நேரம் உடையை களைந்தால் கூட ஃபுரோஸ்ட்பிட் எனும் உறைகடி வந்து ஆளையே நடைபிணம் ஆக்கிவிடும். அவ்வளவு உயரத்தில் ஆக்சிஜன் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு முறையும் நுரையீரலும், ரத்த நாளங்களும் மரணத்தின் பிடிக்குச் சென்று திரும்பும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில நாட்கள் இருந்தாலே மனம் பேதலித்து, பைத்தியம் பிடித்து விடும். எல்லாவற்றுக்கும் மேல் மலைஏறும் ஆணி, கயிறு என குறைந்தது 20 கிலோ பொருட்களை நம் உடம்பில் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். சற்றே நிலை தடுமாறினாலும் பல ஆயிரம் மீட்டர் ஆழம் கொண்ட அதலபாதாளத்தில் விழுந்து உடலைக்கூட தேடி எடுக்க முடியாத மரணம் ஏற்படும். எப்போதும் திடீர் திடிரென மாறிக்கொண்டேயிருக்கும் சீதோஷ்ண நிலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பல மாதங்கள் பயணிக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள்... எவரெஸ்ட் உச்சியை அடைவது, எவ்வளவு கடிமான பயணம் என்று? 

எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது குதிரைக்கொம்பு என எண்ணியிருந்த மனிதர்களுக்கு மத்தியில், துணிந்து ஏறி, உச்சியை அடைந்த எட்மண்ட் ஹிலரியை உலகம் உற்று நோக்கத்தானே செய்யும். இந்த நிகழ்வுக்கு முன் பலர் எவரெஸ்ட் உச்சியை அடையும் முயற்சியில் தோல்வியைச் சந்தித்ததும், இறந்து போனதும் நினைவுகூரத்தக்கது.

ஹிலரியின் இளமைப் பருவம்!

1919-ம் ஆண்டு ஜூலை 20-ல், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஒரு சாதாரண தேனீ வளர்ப்பு குடும்பத்தில் பிறந்தவர் எட்மண்ட் ஹிலரி. இவரது சிறுவயதில் பள்ளி நிர்வாகம் கல்விச் சுற்றுலாவுக்காக 'Mount Ruapehu' என்ற எரிமலைக்கு அழைத்து சென்றது. அப்போதுதான் ஹிலரிக்கு மலை உச்சியை ஏற வேண்டும் என்பதில் தீரா காதல் ஏற்பட்டது. அதன் பின் எப்போதும் சிறு, சிறு மலைகள் ஏறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹிலரியின் சாதனைகள்!

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?'  நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

ஹிலரிக்கு 21 வயதானபோது, நியூசிலாந்தில் 3,764 மீட்டர் உயரம் கொண்ட 'Mount Cook / Aoraki' என்ற மலை மீது ஏறினார். இதுவே மலையேறுவதில் சாதனை செய்ய இவரைத் தூண்டியதாம். இரண்டாம் உலகப்போரின்போது, ராயல் நியூசிலாந்து வான்படையில் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பித்தார் ஆனால், அவரது விண்ணப்பம் பல காரணங்களால் அப்போது நிராகரிக்கப்பட்டது. பின் நியூசிலாந்துப் படைக்கு கட்டாயம் ஆளெடுக்கும் நிலை ஏற்பட்ட போது, ஹிலரி தேர்ந்தெடுக்கப்பட்டார். விமானப் படைப்பிரிவில் சேர்ந்து தனது நாட்டுக்காக பல வீர சாகசங்கள் புரிந்தார். போருக்குப் பின் விடுமுறை நாட்களில் மலை ஏறுவதை மட்டுமே தனது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். மலை ஏறுவதற்கான நுண்ணறிவைப் பெற, அது  சம்பந்தமான புத்தகங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. அதன் பிறகு வெவ்வேறு கால நிலைகளில் வெவ்வேறு உயரமுள்ள 11 மலைகளை தனி மனிதனாக ஏறி சாதனை படைத்தார். இப்படி உயரமான மலை உச்சிகளை தொட்டு வந்த ஹிலரி எவரெஸ்ட் உச்சியை அடைய தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்.

இமாலய சாதனை!

இவர் இப்படி நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், 1952-ம் ஆண்டு எவரெஸ்ட் உச்சியை அடைய சுவிஸ் மலையேறும் குழு தோல்வியைச் சந்தித்து திரும்பி வந்தது. 1953-ம் ஆண்டு பிரிட்டிஷ் மலையேறும் குழுவுடன் தனது இமயத்தை நோக்கிய பயணத்தைத் தொடந்தார் ஹிலரி. இந்தக் குழுவும், காலநிலை மாறுபாட்டால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் ஹிலரியும், டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட் உச்சியை தொட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் பின் வாங்கவில்லை. அதனால், இவர்கள் இருவரும் அதிக எடையுள்ள பொருட்களை சுமந்து கொண்டு தங்கள் குழுவுக்கு விடைசொல்லி புறப்பட்டனர். பல நாட்களாக பனி பாலைவனத்தில் சுற்றித் திரிந்து, உயரமான மலைகளை கடந்து, கடைசியாக மே 29-ம் நாள், சரியாக 11.30 மணிக்கு எவராலும் எட்டமுடியாத எவரெஸ்ட் உச்சியில் தங்களின் கால்தடங்களைப் பதித்தனர். இந்த சிறப்பு மிக்க சாதனைக்கு பரிசாக இரண்டாம் எலிசபெத் மகாராணி, ஹிலரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தார். ஒருமுறை எவரெஸ்ட்டின் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள்? என சிலர் கேட்டபோது "எத்தனையோ பேர் சாதிக்கத் துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டது. இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர் டென்சிங் நார்கே" என்று கூறினார். இவர்கள் இருவரில், யார் முதலில் எவரெஸ்ட் உச்சியில் முதலில் காலடி வைத்தனர் என்ற பெரிய சந்தேகம் எழுந்தது. அதற்கு டென்சிங் நார்கே, "ஹிலரிதான் முதலில் உச்சியை அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில்தான் நான் உச்சியை அடைந்தேன்" என்று தெரிவித்து டென்சிங் நார்கே குழப்பத்தைத் தீர்த்தார். 

'எவரெஸ்ட் நாயகன் எட்மண்ட் ஹிலரிக்கு மலையேறும் விருப்பம் எப்போது வந்தது?'  நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

இப்படி ஒரு சாதனை செய்யக் காரணமாக இருந்த ஷெர்பா இன மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என 1960-களில் 'ஹிமாலயன் டிரஸ்ட்' என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் நேபாள மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தார் ஹிலரி. 1953-ம் ஆண்டு மேரி ரோஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு மகன், இரு மகள்கள் பிறந்தனர். 1975-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விமான விபத்தில் தனது மனைவியையும், ஒரு மகளையும் பறிகொடுத்தார் ஹிலரி. அதன்பின் ஜீன் மல்க்ரூ என்ற பெண்ணை மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2008-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி எவரெஸ்ட் நாயகன் ஹிலரி இம்மண்ணை விட்டு மறைந்தார்.  

அவர், இப்பூவுலகை விட்டு பிரிந்தாலும், அவரது மன உறுதியும், விடாமுயற்சியும் எவரெஸ்ட் உயரத்திற்கு வளர்ந்து என்றென்றும் அவரது நினைவை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

- ஜெ.அன்பரசன்