Published:Updated:

ட்ரம்ப்பின் முடிவால் உபர் டாக்சிக்கு வந்த சோதனை

ட்ரம்ப்பின் முடிவால் உபர் டாக்சிக்கு வந்த சோதனை
ட்ரம்ப்பின் முடிவால் உபர் டாக்சிக்கு வந்த சோதனை
ட்ரம்ப்பின் முடிவால் உபர் டாக்சிக்கு வந்த சோதனை

ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் பயணிகள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். ட்ரம்பின் வர்த்தக ஆலோசனைக் கவுன்சிலில் உபர் நிறுவனத்தின் தலைவர்  டிராவிஸ் கலாநிக் உறுப்பினராக இருப்பதால், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் உபர் டாக்சி அப்ளிகேஷனை டெலிட் செய்துள்ளனர். உபர் டாக்சி ஆப்பை டெலிட் செய்த படத்தை ட்விட்டரில் பதிவு செய்து  #DeleteUber என்ற ஹாஷ் டாகையும் ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையில் இருக்கும் உபர் ஓட்டுனர்கள், ஒரு மணி நேரத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்ல மறுத்து, தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் முன்பு திரண்ட ஓட்டுனர்கள்,'' தடை வேண்டாம், எந்த சுவரும் வேண்டாம், எந்த வெறுப்பும் பயமும் வேண்டாம், புலம்பெயர்ந்தோர்களை வரவேற்போம்'' என கோஷமிட்டனர். 

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உபர் டாக்சியில் ஓட்டுனர்களாகப் பணியாற்றுகின்றனர். தங்களது போராட்டத்தில் உபர் நிறுவனமும் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உபர் நிறுவனத்தின் தலைவருக்கும் ட்ரம்புக்கும் இடையிலான தொடர்பை விமர்சித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உபர் தலைமையகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.  இந்தநிலையில், ட்ரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர்களுக்கு உபர் இழப்பீடு வழங்கும் என  டிராவிஸ் கலாநிக் தெரிவித்துள்ளார். ஓட்டுனர்களின்  குடியேற்றம் தொடர்பான உதவிக்கு சட்டப் பாதுகாப்பு நிதியாக 3 மில்லியன் டாலரை உபர் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.'' இந்தத் தடையால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் உடனான முதல் வர்த்தக ஆய்வு கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்ப உள்ளேன்'' எனவும் டிராவிஸ் கலாநிக் கூறியுள்ளார்.