Published:Updated:

சேனல் 4 தொலைக்காட்சிக்கு இரு சர்வதேச விருதுகள்!

லண்டன்/கொழும்பு:’இலங்கையின் கொலைக் களம்’ எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு  செய்ததற்காக சேனல் 4 தொலைக்காட்சி,இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

உலக ஊடக விருது விழா ஒன்றில்,சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த  ஆவணப்படம் ஆகிய விருதுகள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை  நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தக் காரணமாக இருந்ததை  கருத்தில்கொண்டே இவ்விரு விருதுகளும் சேனல் 4 தொலைக்காட்சிக்கு  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, தான் இதுவரையில்  வெளியிட்ட செய்திகளில் மிகவும் முக்கியமானது ’இலங்கையின் கொலைக் களம்’தான்  என்று கூறியுள்ளார்.