Published:Updated:

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

Published:Updated:
’7 வயதில் பாலியல் துன்புறுத்தல், 14 வயதில் வன்புணர்வு!’ - ஹாலிவுட் நடிகையின் உலுக்கும் அறிக்கை

'டபுள் ஜாபர்டி', 'எ டைம் டு கில்' உள்ளிட்ட ஹிட் ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கும் 48 வயதான ஹாலிவுட் நடிகை ஆஷ்லே ஜட், கடந்த ஜனவரி 30 அன்று, பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற உலக மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசும்போது, தான் ஏழு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதையும், 14 வயதில் வன்புணர்வுக்கு ஆளானதையும் பகிர்ந்துகொண்டது அந்த மாநாட்டின் தேவையை அழுத்தமாக உணர்த்துவதாக அமைந்தது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஆஷ்லே, பிரபலமான நடிகை என்பதுடன் தீவிரமான சமூக செயற்பாட்டாளரும்கூட. மாநாட்டில், ஏழு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கும், 14 வயதில் வன்புணர்வுக்கும் ஆளான தான் மீண்டும் 30 வயதில் அந்தக் கொடுமைக்கு ஆளானதாகக் குறிப்பிட்டார். மேலும் பாலியல் பாகுபாடு பற்றி தொடர்ந்து பேசிய ஆஷ்லே, தான் பெண் என்ற காரணத்தாலேயே, சக ஆண் நடிகர்களைவிட தன்னுடைய சம்பளம் 40% குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை பல பிரபலங்களும் பொதுவெளியில் வெளிப்படையாக விமர்சித்து வரும் சூழலில், ஆஷ்லேயும் தன் எதிர்ப்பை அந்த மேடையில் பதிவு செய்தார்.  தன் தாய்நாடான அமெரிக்கா, பாலின சமத்துவத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.


ஆஷ்லேயின்  அம்மா நியோமி ஜட், தங்கை வைநோனா ஜட் இருவரும் புகழ்பெற்ற பாடகிகள். ஆஷ்லே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை ஏற்கெனவே பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு 'மிரர்' இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் 'கிஸ் த கேர்ள்ஸ்' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஹாலிவுட்டின் சூப்பர் பாஸ் ஒருவர், தன்னை தன் ஓட்டல் அறைக்கு வரச் செய்து, தான் குளிப்பதை பார்க்கச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
'நான் ஹாலிவுட்டின் அதிகாரமிக்க பாஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். அவர் அந்த கள்ளத்தனத்தில் நிபுணத்துவம் பெற்றவர். 'ஹோட்டலுக்கு வா, சேர்ந்து சாப்பிடலாம்' என்ற வார்த்தைகளில் என்னை அழைத்தார் ' என்று குறிப்பிட்ட ஆஷ்லே, தன் சக  நடிகைகளுக்கும் இது நேர்ந்ததை என்பதையும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மற்ற நடிகைகளின் பெயர்களைக் குறிப்பிடாத ஆஷ்லே, 'நான் அந்த சம்பவத்தை அவர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, 'நான் குளிப்பதை நீ பார்க்கிறாயா?' என்று அவர் என்னிடம் கேட்டார்' என்று நான் சொன்னதும், 'என்னிடமும் அதையேதான் சொன்னார்' என்று, கிட்டத்தட்ட அங்கிருந்த அத்தனை தோழிகளும் ஆவேசத்துடன் கூக்குரலிட்டனர்' என்று 'மிரர்' இதழில் தெரிவித்திருந்தார் ஆஷ்லே.

மாநாட்டில், உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கூடிய சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கூறிய ஆஷ்லே, 'பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களான நாம் ஒன்றாகக் கரங்கள் கோக்கும்போது, நம்மால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். குற்றத்துக்கான தண்டனை குற்றவாளிக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அதன் விளைவுகள் தீண்டுவதை சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும்' என்றார்.

ஆஷ்லேக்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் பகிர்வது, அது குறித்த விழிப்புஉணர்வுக்கு.  பரவட்டும் நோக்கம்.
 

-  தென்றல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism