Published:Updated:

ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில்  இருந்து விலகிய உபர் ஓனர்!

ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில்  இருந்து விலகிய உபர் ஓனர்!
ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில்  இருந்து விலகிய உபர் ஓனர்!

மெரிக்காவுக்கு வரும் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய  7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி உத்தரவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில் உபர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் இடம்பெற்றிருந்ததால்,  அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் உபர் அப்ளிகேஷனை டெலிட் செய்தனர். அப்ளிகேஷனை டெலிட் செய்யும் படத்தை சமுகவளைத்தளங்களில் பதிவு செய்து, #DeleteUber என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். 

ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில்  இருந்து விலகிய உபர் ஓனர்!

''இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் ட்ரம்ப்புடன் உபேர் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் தொடர்பு வைத்திருந்தால் உபரை புறக்கணிப்போம்'' என அமெரிக்கர்கள் எச்சரித்தனர். அத்துடன், ட்ரம்பின் நடவடிக்கையைக் கண்டித்து உபர் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல தரப்பிடம் இருந்து டிராவிஸ் கலாநிக்கிற்கு அழுத்தம் வந்த நிலையில்,  ட்ரம்பின் வணிக ஆலோசனைக் கவுன்சிலில்  இருந்து கலாநிக் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.