Published:Updated:

தெற்கு சூடானில் பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தெற்கு சூடானில் பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு!
தெற்கு சூடானில் பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு!

தெற்கு சூடானில் பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு!

தெற்கு சூடானில் பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு!


தெற்கு சூடானை பஞ்சம் தாக்கியுள்ளதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தெற்கு சூடானில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் வரை பட்டினியில் வாடுவதாகவும் ஐ.நா.சபை கூறியுள்ளது. முக்கியமாக, தெற்கு சூடானில் உள்ள யூனிட்டி மாநிலத்தில் அதிக அளவில் பஞ்சம் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சத்தைப் போக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் இது பரவக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஐ.நா.சபையால் பஞ்சம் பிரகடனப்படுத்தப்படுவது மிகவும் அபூர்வம் என்பதால், இந்தப் பிரச்னை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு