Published:Updated:

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு

பூமியைப் போன்று 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.  

ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 

'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் வசிக்கும் சூரியக் குடும்பத்தின் ஆயுள் முடிவுக்கு வந்த பிறகும்கூட,  ட்ராப்பிஸ்ட் - 1 உயிர்ப்போடு இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு