மழைக்குப் பின்னே, இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

மழைக்குப் பின்னே, இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

சில நாள்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், அங்கிருக்கும் நீர்நிலைகளில் மழைநீர் வழிந்தோடியது. அரிதினும் அரிதான நிகழ்வாக, அமெரிக்காவின் மிக உயரமான அணையின் வடிகாலில் விரிசல் விழும் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. இந்த அசாத்திய இயற்கைச் சூழலால் மக்களும் மிகவும் அவதியுற்றனர்.
கடும் மழை காரணமாக கலிபோர்னியாவின் மற்ற நீர்நிலைகளைப் போல, பெரிசா ஏரியும் (Berryessa Lake) நிரம்பியது. இதனால், அந்த ஏரியின் குறுக்கே இருக்கும் மான்டிசெல்லோ அணையின், குளோரி ஹோலில் (Glory Hole) நீர் வழிந்தோடியது. இதை ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி வீடியோக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் காட்சி யூடியூப்பில் வெளியாகி காண்பவர்களை ஆச்சர்யபட வைத்துள்ளது.
இந்த 'ஹோல்', அணையின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு வடிகால். அணை உச்சக்கட்ட உயரத்துக்கு நிரம்பினால் மட்டுமே இந்த ஹோல் வழியாக நீர் வழிந்தோடும். கனமழை காரணமாக இந்த ஹோலில் இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவின் 'க்ளோரி ஹோலின்' சிறப்பு, இதில் வழியும் நீர் கீழே இருக்கும் பெரிசா ஏரியில் கலந்துவிடுகிறது. கீழே இருக்கும் லின்க்கை கிளிக் செய்து வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். இது தினமும் பார்க்கக்கூடிய காட்சியல்ல. ஆச்சர்யத்தைப் பார்க்கத் தயாராகுங்கள்...