Published:Updated:

போராட்டக்காரர்கள் மரணம் தொடர்பான வழக்கு - முன்னாள் எகிப்து அதிபர் விடுதலை!

எகிப்து நாட்டில், கடந்த 2011-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் முகமது ஹாஸ்னி முபாரக்கை எதிர்த்து தலைநகர் கெய்ரோவில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வலுத்ததால், ஹாஸ்னி முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

போராட்டக்காரர்கள் மரணம் தொடர்பான வழக்கு - முன்னாள் எகிப்து அதிபர் விடுதலை!

ஆனால், போராட்டத்தை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட அடக்குமுறையால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். ராணுவத்துக்கு உத்தரவிட்ட ஹாஸ்னி முபாரக் மீது வழக்குத் தொடரப்பட்டு, 2012-ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹாஸ்னி முபாரக் செய்த மேல்முறையீட்டில், 2015-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் போராட்டக்காரர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், தற்போது ஹாஸ்னி முபாரக் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு