Published:Updated:

ரயில்வேயில் அரபு அமீரகம் முதலீடு?

ரயில்வேயில் அரபு அமீரகம் முதலீடு?
ரயில்வேயில் அரபு அமீரகம் முதலீடு?

ரயில்வேயில் அரபு அமீரகம் முதலீடு?

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, துபாய் சென்றார். அங்கு, அபுதாபி முதலீடு ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். பின்னர் பேசிய அவர், 'அதிகாரிகளுடன் நல்ல சந்திப்பு நிகழ்ந்தது. இந்திய ரயில்வே துறையை நவீனமாக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடுசெய்ய உள்ளோம். ஐக்கிய அரபு அமீரகம், இந்திய ரயில்வேயில் முதலீடுசெய்ய வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.

ரயில்வேயில் அரபு அமீரகம் முதலீடு?

இதுகுறித்து, அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக விடுத்த அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு