Published:Updated:

அமெரிக்க மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Vikatan Correspondent
அமெரிக்க மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அமெரிக்க மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அமெரிக்க மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்காவின் ஐந்து முக்கிய மசூதிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதில், ஒரு மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்திலுள்ள  லெக்ஸிங்டன் மசூதிக்கு பச்சை நிற அட்டை ஒன்று வந்தது. அதில், 'விரைவில் இந்த மசூதியில் வெடிகுண்டு வைக்கப்படும்' என்று எழுதியிருந்தது. 

மேலும், மற்ற நான்கு மசூதிகளுக்கு மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன. 'உங்களுக்கும், உங்கள் இனத்திற்குமான மரணம் காத்துக் கொண்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 15-ம் தேதி, அமெரிக்காவிலிருக்கும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த மசூதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.