Published:Updated:

பாகிஸ்தானில், சீன உதவியுடன் கட்டப்படும் அணுஉலைக்கு அனுமதி!

Vikatan Correspondent
பாகிஸ்தானில், சீன உதவியுடன் கட்டப்படும் அணுஉலைக்கு அனுமதி!
பாகிஸ்தானில், சீன உதவியுடன் கட்டப்படும் அணுஉலைக்கு அனுமதி!
பாகிஸ்தானில், சீன உதவியுடன் கட்டப்படும் அணுஉலைக்கு அனுமதி!

பாகிஸ்தானின் கராச்சி நகரில், சீன உதவியுடன் K2 மற்றும் K3 அணுஉலைகளை பாகிஸ்தான் அமைத்துவருகிறது. இதற்கான பாதுகாப்பு அனுமதியைக் கோரி, சர்வதேச அணுசக்தி நிறுவனத்துக்கு (IAEA) விண்ணப்பம்செய்திருந்தது. இந்த அணுஉலைகள் ஒவ்வொன்றும் தலா 1100 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்டவையாகக் கட்டப்படுகிறது. 

இந்த அணு உலைகளுக்கான பாதுகாப்பு அனுமதியை சர்வதேச அணுசக்தி நிறுவனம் தற்போது வழங்கியுள்ளது. இந்த அணுஉலையின் மூலம், பாகிஸ்தானின் அதிகரிக்கும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.