Published:Updated:

கௌதமலா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீ - 19 பேர் பலி!

Vikatan Correspondent

கௌதமலா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீ

கௌதமலா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீ - 19 பேர் பலி!
கௌதமலா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீ - 19 பேர் பலி!
கௌதமலா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தீ - 19 பேர் பலி!

கௌதமலா நாட்டில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் தீ பற்றியதன் காரணமாகப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 19 பேர் பலியானார்கள். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். கௌதமலா நாட்டின் சான் ஜோஸ் பினுலா நகரில் இந்த விபத்திலபேற்பட்ட இடத்தில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 400 பேர் தங்கக்கூடிய இல்லத்தில், அதற்கு அதிகமானோர் தங்கியிருந்ததாகவும், நிர்வாகக் குளறுபடிகள்,  பாலியல் தொந்தரவு போன்ற காரணங்களால் அந்த இல்லத்தில் பிரச்னைகள் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஏற்பட்டிருக்கும் இந்தத் தீ விபத்து, விபத்தாக அல்லாமல் இல்லத்தில் இருந்தவர்களாலேயே தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இல்லத்தில் தங்கியிருந்தவர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் திரண்டுள்ளனர்.