Published:Updated:

'1945-க்குப் பிறகு மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடி..!'- ஐ.நா சபை

விகடன் விமர்சனக்குழு

ஐக்கிய நாடுகள் சபை, 1945-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஐ.நா. சபை நிறுவப்பட்ட பிறகு மனிதகுலம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் பஞ்சத்தினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை கூறியுள்ளது. 

ஏமன், தெற்கு சூடான், சோமாலியா மற்றும் வடகிழக்கு நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பசி மற்றும் பஞ்சத்தினால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாடுகளில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள், போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். 

'இந்த மிகப் பெரிய மனிதகுல நெருக்கடியை சமாளிக்க 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரும் ஜூலைக்குள் தேவைப்படும். அப்படி, இந்த நிதி திரட்டத் தவறும் பட்சத்தில், விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று ஐ.நா கூறியுள்ளது.

முன்னர், ஐ.நா-வின் கிளை அமைப்பான யுனிசெப், இந்த ஆண்டு மட்டும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் 14 லட்சம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கக்கூடும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.