Published:Updated:

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு - 40ற்கும் அதிகமானோர் பலி

விகடன் விமர்சனக்குழு
சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு - 40ற்கும் அதிகமானோர் பலி
சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு - 40ற்கும் அதிகமானோர் பலி
சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு - 40ற்கும் அதிகமானோர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில், 40ற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இராக்கியர்கள். பழைய டமாஸ்கஸ் நகரிலிருக்கும் பாப் அல் சாகிர் கல்லறையின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. சிரியாவின் முக்கிய புனிதத் தலமாக கருதப்படும் பாப் அல் சாகிர் பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் 40ற்கும் அதிகமான இராக்கியர்கள் புனித யாத்திரையாக வந்திருந்தனர். ஷியா பிரிவைச் சேர்ந்த அவர்களை இலக்காக வைத்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஒரு குண்டு சாலையின் ஓரத்தில் இருந்து வெடித்ததாகவும், மற்றொன்று மனித வெடிகுண்டு என்றும் சொல்லப்படுகிறது. டமாஸ்கஸ் சிரிய அதிபர் பஷர் அல்- அசாத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்த நகரமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், அங்கு நடந்திருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிரியாவில் மார்ச்  2011யிலிருந்து, இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தீவிரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர்.