Published:Updated:

மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை தயாரிக்கும் எலான் மஸ்கின்!

மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை தயாரிக்கும் எலான் மஸ்கின்!
மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை தயாரிக்கும் எலான் மஸ்கின்!

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஓ எலான் மஸ்க் நியூரான்லிக் என்னும் நிறுவனத்தைத் துவங்க உள்ளார். இதற்கான பணிகள் துவக்க கட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூரான்லிக் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை தயாரிக்கும் எலான் மஸ்கின்!


இதுகுறித்து எலான் மஸ்க் ட்விட்டரில், "நியூரா லேஸ் எனும் வழிமுறை சார்ந்து பணிகள் நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள முடியும்.

தற்போது, மருத்துவ முறைகளில் எலக்டிரோடு அரே  மற்றும் இம்ப்லான்ட்கள் மூலம் பல்வேறு நோய்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. எனினும், இவை உலகம் முழுக்க சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை மிகவும் அபாயகரமானது என்பதால் இதன் பயன்பாடு அளவு மிகவும் குறைவாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

நியூரான்லின்க் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள், அடுத்த மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.