Published:Updated:

’சிங்கள அமைச்சர்களை தமிழகத்தில் அவமதித்தால் பதிலடி! ’

’சிங்கள அமைச்சர்களை தமிழகத்தில் அவமதித்தால் பதிலடி! ’
’சிங்கள அமைச்சர்களை தமிழகத்தில் அவமதித்தால் பதிலடி! ’
’சிங்கள அமைச்சர்களை தமிழகத்தில் அவமதித்தால் பதிலடி! ’

கொழும்பு: இந்தியாவிற்கு செல்லும் சிங்கள அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவமதிக்கப்படுவது  தொடர்ந்தால் இந்தியாவிலிருந்து வருபவர்களையும்  அவ்வாறே உபசரிக்க வேண்டிய நிலைமை உருவாகும் என இலங்கை எதிர்கட்சி  எம்.பி.யான ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

இலங்கை ௭திர்க்கட்சியின் பிரதம கொறடாவும், ஐக்கிய தேசிய கட்சியின் ௭ம்.பி.  யுமான ஜோன் அமரதுங்க,இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

”அமைச்சர் ரெஜினோல்ட் குரே அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக  இந்தியா (கோவை) சென்றிருந்தார்.ஆனால் அங்கு அமைச்சருக்கு ௭திராக  ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பாக சபாநாயகர், இந்தியாவிலுள்ள இலங்கை தூதருக்கும், இலங்கைக்கான  இந்திய தூதருக்கும் தெரியப்படுத்தி ௭திர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

௭மது நாட்டு அமைச்சருக்கு ௭திராக இந்தியாவில் உருவான சம்பவமானது பிழையான  முன்னுதாரணமாகும்.அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை, ஏனைய  அமைச்சர்களுக்கும் ௭ம்.பி. க்களுக்கும் ஏற்படலாம். சார்க் (பிராந்திய ஒத்துழைப்புக்கான  தெற்காசிய அமைப்பு) அமைப்புக்கான விசா பெற்றுக் கொண்டே அமைச்சர்கள் இந்தியா  செல்கின்றனர்.

அவ்வாறு சட்ட ரீதியாக அங்கு சென்ற அமைச்சருக்கு இவ்வாறான நிலைமை உருவாகி  வெளியேற்றப்பட்டுள்ளார்.இது மிகவும் பயங்கரமான ஆபத்தான நிலைமையாகும்.  இந்நிலைமை தடுக்கப்படாவிட்டால் இந்தியாவிலிருந்து வருபவர்களையும் அவ்வாறே  உபசரிக்க வேண்டிய நிலைமை உருவாகும்.

அத்தோடு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இந்தியா  செல்லவில்லை.அதிகாரப்பூர்வகமான விஜயத்தை மேற்கொண்டே அங்கு சென்றார்.

இதற்கு மேலாக ஜனாதிபதி ராஜபக்ச பிரிட்டிஷ் மகாராணியின் 60 ஆவது முடி சூட்டு  ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார்.அப்போது அங்குள்ள வர்த்தக  மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றவிருந்தார்.

ஆனால் ஜனாதிபதியால் அங்கு உரையாற்ற முடியாமல் போனதுடன் பாதுகாப்பும்  வழங்கப்படவில்லை.இதனால் இம்மாநாடே இடம்பெறவில்லை.அது ரத்துச் செய்யப்பட்டு  விட்டது.இதனால் இலங்கைக்கே அகௌரவம் ஏற்பட்டது.

ஜனாதிபதியை அவமதிப்பது ௭மது நோக்கமல்ல.இனி மேலும் இவ்வாறான சம்பவங்கள்  இடம்பெறாமல் இருக்க வழி செய்ய வேண்டுமென்பதே ௭மது வலியுறுத்தலாகும்”என்று  கூறினார்.