Published:Updated:

எச்-1 பி விசா கட்டுப்பாடுகள்! இந்தியர்களை கலங்கடிக்கும் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி

எச்-1 பி விசா கட்டுப்பாடுகள்!  இந்தியர்களை கலங்கடிக்கும் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி
எச்-1 பி விசா கட்டுப்பாடுகள்! இந்தியர்களை கலங்கடிக்கும் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி

கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்களுக்கு எச் - 1 பி விசா (H-1B work visa) வழங்குவதில் அமெரிக்க அரசு புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

எச்-1 பி விசா கட்டுப்பாடுகள்!  இந்தியர்களை கலங்கடிக்கும் ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி


 

அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி (H-1B wor k visa)  விசாவுக்கு அந்நாட்டு அரசு, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவேன் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயல்நாட்டவர்களை பணியமர்த்தும் போதும், எச்-1பி விசா மூலம் நடக்கும் மோசடியை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சான் ஸ்பைசர் கூறிய சில முக்கிய தகவல்கள்:

* ட்ரம்ப் அரசு எச்-1பி விசா திட்டத்தில் கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள், விசாவை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கவும்,  அமெரிக்கப் பணியாளர்களின் நலனை காக்கவும் தான். 

* அயல் நாட்டவர்கள் குறைந்த சம்பளத்துக்கு பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் அமெரிக்காவில் தகுதி பெற்ற, திறமை வாய்ந்தவர்கள் வேலையில்லாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.  

* புதிய விசா கொள்கைக்கான உத்தரவை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ( US Citizenship and Immigration Services) துறை கடந்த மார்ச், 31-ம் தேதி பிறப்பித்தது. 

* எச்-1 பி விசா இனி சிறப்பு தொழில் பிரிவின்கீழ் (specialist professions)  பணியமர்த்தப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

* எனவே இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு படித்த கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்கள் சிறப்பு பணியிட தகுதி பெற மாட்டார்கள்.  அவர்களுக்கு இந்த விசா வழங்கப்படாது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டுக்கு பணிப்புரிய செல்லும் இந்திய கம்ப்யூட்டர் ப்ரோகிராமர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவின்  எச்1-பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்பட தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் முன்னர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.