Published:Updated:

எகிப்து தேவாலய தாக்குதல் எதிரொலி: மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி

எகிப்து தேவாலய தாக்குதல் எதிரொலி: மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி
எகிப்து தேவாலய தாக்குதல் எதிரொலி: மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி

எகிப்து தேவாலய தாக்குதல் எதிரொலி: மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி

குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, எகிப்தில் மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தேவாலய தாக்குதல் எதிரொலி: மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி

எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதிகளவிலான கிறிஸ்தவர்கள் தேவாலயம் வரும் ஞாயிற்றுக்கிழமையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டான்டா என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, இரண்டு நகரங்களில் அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எகிப்தில் மூன்று மாதங்களுக்கு எமர்ஜென்சி பிறக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு