Published:Updated:

அமெரிக்கா வாழ் தமிழரின் வாழ்க்கை வரலாறு- இறந்த பின் கிடைத்த புலிட்சர் விருது!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்துக்கு, அவர் இறந்த பின்னர், புலிட்சர் விருதுப் பட்டியலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்கா வாழ் தமிழரின் வாழ்க்கை வரலாறு- இறந்த பின் கிடைத்த புலிட்சர் விருது!

அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர், நரம்பியல் மருத்துவர் பால் கலாநிதி (37). தமிழகத்தைப் பூர்விமாகக்கொண்ட இவர், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். மருத்துவத்துறையில் முன்னேறிவந்த காலகட்டத்தில், தனக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை அறிந்தார். இரண்டு ஆண்டுகாலம் புற்றுநோய் சிகிச்சைபெற்றுவந்த பால் கலாநிதி, தனக்குக் கிடைத்த நேரத்தில், தன் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதினார். ‘When Breath Becomes Air’ என்ற இந்தச் சுயசரிதைப் புத்தகத்தை எழுதிய பால், 2015-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பினால் மறைந்தார். இந்தப் புத்தகத்துக்கு, பால் கலாநிதியின் மனைவி லூசி பால் முடிவுரை எழுதியுள்ளார். இந்தத் தம்பதியினருக்கு, பால் கலாநிதியின் மறைவுக்கு சில மாதங்கள் முன்னர்தான் குழந்தை பிறந்துள்ளது.

பால் இறந்த பின்னர், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்துக்கு, தற்போது உலக அங்கீகாரமான புலிட்சர் விருதில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
 
அடுத்த கட்டுரைக்கு