Published:Updated:

இவர்தான் அடுத்த பிரான்ஸ் அதிபரா?

இவர்தான் அடுத்த பிரான்ஸ் அதிபரா?
இவர்தான் அடுத்த பிரான்ஸ் அதிபரா?

இவர்தான் அடுத்த பிரான்ஸ் அதிபரா?

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இமானுவேல் மேக்ரன் தன்னுடைய இளம் வயதிலேயே இத்தகைய உயர் பதவியில் போட்டியிடுகிறார். பிரான்ஸின் ஆளும் கட்சியை ஆட்டம் காண வைத்து அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கிறார் மேக்ரன். அடுத்த அதிபர் மேக்ரன்தானா என்ற கேள்வி பிரான்ஸில் மட்டுமல்ல தற்போது உலகம் முழுவதிலும் இச்செய்திதான் ட்ரெண்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இவர்தான் அடுத்த பிரான்ஸ் அதிபரா?

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் இமானுவேல் மேக்ரன். 39 வயதான மேக்ரன் அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளார். முதல் சுற்றின் முடிவின்படி பிரான்ஸின் அதிபராவதற்கான வாய்ப்புகள் மேக்ரனுக்கு அதிகமாகவே உள்ளதாக உள்ளூர்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

இந்த அதிபர் வேட்பாளரின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ். இவருக்கு வயது 64. தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மணந்துள்ளார் மேக்ரன். 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதே போலவே 2007-ம் ஆண்டு மணந்தார்.

பிரான்ஸின் இளம் அதிபர் வேட்பாளர் என்பது மேக்ரானின் கூடுதல் பலமாகவே கருதப்படுகிறது. மேக்ரனின் பரபரப்பான அரசியல் வாழ்க்கை, பிரான்ஸை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள், நவீன வாக்குறுதிகள் என மேக்ரானைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார்கள் பிரான்ஸ் மக்கள்.

ஆளும் கட்சிக்கே தண்ணி காட்டிவிட்டு முன்னேறி வரும் இந்த இளம் அதிபர் வேட்பாளர் பிரான்ஸின் வரலாற்றையே புரட்டிப் போடுவார் என நம்பப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு