Published:Updated:

ட்ரம்ப் : 100 நாட்களில் 488 சொதப்பல்கள்! #VikatanDataStory #VikatanInfographics

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி
ட்ரம்ப் : 100 நாட்களில் 488 சொதப்பல்கள்! #VikatanDataStory #VikatanInfographics
ட்ரம்ப் : 100 நாட்களில் 488 சொதப்பல்கள்! #VikatanDataStory #VikatanInfographics

மெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன் என்று பன்ச் டயலாக்குடன் அதிபரான ட்ரம்ப் முதல் நூறு நாட்களில் செய்தது என்ன? பதவியேற்பு விழாவுக்கு கூட்டம் வராதது துவங்கி ஆன்லைனில் ஆங்க்ரி எமோஜி பறந்தது வரை எல்லாமே எதிர்ப்பலைகள் தான்.

சிரியா உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததால் ஆஸ்கர் மேடையில் ட்ரம்ப் சந்தித்த அவமானம், இதே காரணத்துக்காக சிலிக்கான் வேலி சிஇஓக்கள் சீறி எழுந்தது என்று ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லை என்பதை நிருபித்து கொண்டுதான் இருக்கிறார். ஒபாமாவின் இன்ஷூரன்ஸ் திட்டமான ஒபாமா கேரை முதல் கையெழுத்திலேயே தூக்கி வீசினார். 100 நாட்களில் 981 ட்விட்கள் மனுஷன் எப்ப பாத்தாலும் ட்விட்டரிலேயே வாழ்கிறார். அது மட்டுமின்றி பத்திரிகையாளர் சந்திப்பு, மேடை பேச்சு, சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இந்த 100 நாட்களில் 488 முறை சொதப்பலாக ஏதோ ஒரு விஷயத்தை செய்து வைரலாகியுள்ளார். 

#TRUMP100

...