Published:Updated:

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

இரா.மோகன்
ர.பரத் ராஜ்

இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் சிலவற்றை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில், தமிழக மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், முன்பு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் சிலவற்றை விடுவிக்க தீர்மானித்துள்ள போதிலும் அந்தப் படகுகள் பயன்படுத்த உகந்த தரத்தில் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் பிடியில் தமிழக மீனவர்களின் 134 படகுகளும் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் 10 படகுகளும் உள்ளன. 
வடக்கு மாகாண மீனவர்கள் அனுமதித்தால் மட்டுமே படகுகளை விடுவிக்க முடியும் என கடந்த வாரம் இலங்கை அமைச்சர் மஹிந்தா கூறியிருந்த நிலையில், படகுகளை விடுவிக்க இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழக மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.