Published:Updated:

அமெரிக்கா: கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

குருபிரசாத்
அமெரிக்கா: கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!
அமெரிக்கா: கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா: கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒரு கல்லூரியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த மர்மநபர் உள்ளே நுழைந்த உடனேயே மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, உயிரிழந்தவர்களில் ஒருவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என, போலீஸார் சந்தேகித்துள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இரண்டு உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். குறிப்பாக, இந்த வாரத்தில் மட்டும் அந்தக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது. இதுதொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.