Published:Updated:

வாட்ஸ்அப் முடக்கத்தால் ஃபேஸ்புக்கில் மெசேஜ் பரிமாற்றம்!

ந.பா.சேதுராமன்
வாட்ஸ்அப் முடக்கத்தால் ஃபேஸ்புக்கில் மெசேஜ் பரிமாற்றம்!
வாட்ஸ்அப் முடக்கத்தால் ஃபேஸ்புக்கில் மெசேஜ் பரிமாற்றம்!
வாட்ஸ்அப் முடக்கத்தால் ஃபேஸ்புக்கில் மெசேஜ் பரிமாற்றம்!

உலகம் முழுவதும், இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை, முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. தகவல் பரிமாற்றத்துக்கு 'வாட்ஸ் அப்' சேவையை மட்டுமே நம்பி இருந்த கோடிக்கணக்கான 'ராக்கோழி'கள், வாட்ஸ்அப் திடீரென்று முடங்கியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாட்ஸ்அப் முடங்கிய தகவலை ஃபேஸ்புக் 'மெசஞ்சர்' வழியாக தங்களின் தொடர்பு எல்லையில் இருப்பவர்களுக்கு அனுப்பி, ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். 'தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து, வாட்ஸ்அப் சேவையை இன்னும் சில மணி நேரத்தில் அந்த நிறுவனம் அளிக்கும். 'கவலைப்படாதே நண்பா' போன்ற ஆறுதல்கள், அதிகாலையிலும் ஃபேஸ்புக்கில் கொட்ட ஆரம்பித்திருக்கிறது.