Published:Updated:

வாட்ஸ்அப் முடங்க இதுதான் காரணமா?

ந.பா.சேதுராமன்
வாட்ஸ்அப்  முடங்க இதுதான் காரணமா?
வாட்ஸ்அப் முடங்க இதுதான் காரணமா?

சமூக வலைதளமான வாட்ஸ்அப் நிறுவனம்,  தமது நிறுவனம் வெளியிட்ட 'பீட்டா' பதிப்பில் பிழை இருப்பதால், அதைப் பயன்படுத்த வேண்டாம் என  இரண்டு நாள்களுக்கு முன் பயனாளிகளுக்கு அறிவித்தது.

வாட்ஸ்அப்  முடங்க இதுதான் காரணமா?

வாட்ஸ்அப்  நிறுவனம், சோதனை முயற்சியாக சில  மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய பதிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தப் பதிப்பை, விண்டோஸ் ஃபோன்களில்  'டவுண்லோட்'  செய்யும்போது,   'மீடியா கோப்பு'களைப் பெறுவதில் சிக்கல் உள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல, 'வாட்ஸ்அப்' பில் மெசேஜ்களை அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாகச் சொல்லப்பட்டது.


 பயனாளர்களின் குற்றச்சாட்டுக்கு,'சரியான முறையில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, 'வாட்ஸ்அப் பீட்டா 2.17.140' பதிப்பு கொண்டுவரப்பட்டது. ஆனால், அது  இன்னும் முழுமையடையவில்லை. எனவே, இந்த பீட்டா பதிப்பைத் தரவிறக்கம் ( டவுண்லோட்) செய்ய வேண்டாம்' என்று வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு பதில் சொன்னது.


  இரண்டு நாள்களுக்கு முன்னர், இப்படியோர் அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில்தான், இன்று (4.5.2017) அதிகாலை, அதன் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.  


மாற்றத்துக்கான புதிய முயற்சியில் ஈடுபடும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது 'வாட்ஸ் அப் பீட்டா 2.17.140' பதிப்பை முழுமையாகக் கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல் போன்ற காரணங்களால், வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.