Election bannerElection banner
Published:Updated:

காலிழந்த சிறுமி ஓடி விளையாடும் முதல் அனுபவமும் தோழிகளின் குதூகலமும்!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி அனு கடுமையான நோயால் தாக்கப்பட்டிருந்ததால், அனுவின் ஒரு கால், பிறந்தவுடன் அகற்றப்பட்டுவிட்டது. பள்ளியில் படித்துவரும் அனுவுக்கு, மற்ற குழந்தைகளைப் போல ஓடி விளையாட வேண்டும் என்பது கனவாக இருந்தது. 

தற்போது, அந்த நாட்டு அரசு அளித்த நிதியுதவியால், அனுவுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. பிங்க் நிறத்தில் ப்ளேட் போன்று இருக்கும் இந்தச் செயற்கைக் கால் கொண்டு, அனுவால் ஓடி விளையாட முடியும். 

செயற்கைக் கால் பொருத்தப்பட்டவுடன், அந்த சந்தோஷத்தை முதல்முறையாகத் தன் தோழிகளுடன் பகிர்ந்துகொண்டார் அனு. அந்தக் காட்சி, வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டது. அனு முதல் முறையாக நடந்துவருவதைப் பார்த்த அவரின் தோழிகளுக்கு, அளவில்லா மகிழ்ச்சி. அனுவைக் கட்டியணைத்துத் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரல்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு