Election bannerElection banner
Published:Updated:

ஒபாமா திட்டம் ரத்து : ட்ரம்ப்பின் முதல் கையெழுத்துக்கு கிடைத்தது வெற்றி!

ட்ரம்ப் பதவியேற்றதும், முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகம்செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்துசெய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான உத்தரவில் தனது முதல் கையெழுத்தைப் போட்டார். அந்த உத்தரவில், 'ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச்சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத்திட்டத்தை அறிமுகம்செய்வோம். 

ஒபாமா திட்டம் ரத்து : ட்ரம்ப்பின் முதல் கையெழுத்துக்கு கிடைத்தது வெற்றி!

புதிய திட்டம் அறிவிக்கும் வரை தற்போதுள்ள திட்டத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக்களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

'ஒபாமா கேர்' திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், மக்களுக்கு ட்ரம்ப்பின் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒபாமா கேர் திட்டத்துக்கு மாற்றாக, ட்ரம்ப் புதிய சுகாதாரத் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். ஆனால், இதை செயல்படுத்துவதற்காக ட்ரம்ப் எடுத்த இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் 'சுகாதாரத் திட்டம்' குறித்த மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடந்தது. இதற்கு, ஜனநாயகக் கட்சியினர் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. குடியரசுக் கட்சியின் ஆதரவுடனே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு