Published:Updated:

'எடை குறைந்தும் நிம்மதியில்லை' - அவதியில் எகிப்திய பெண் இமான்!

இரா.கலைச் செல்வன்
'எடை குறைந்தும் நிம்மதியில்லை' - அவதியில் எகிப்திய பெண் இமான்!
'எடை குறைந்தும் நிம்மதியில்லை' - அவதியில் எகிப்திய பெண் இமான்!
'எடை குறைந்தும் நிம்மதியில்லை' - அவதியில் எகிப்திய பெண் இமான்!

உலகின் அதிக எடைகொண்ட பெண்ணாக அறியப்பட்டவர், எகிப்தைச் சேர்ந்த 'இமான் அப்த் எல் அடி'. இந்தியாவில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை முடித்து, தற்போது அபுதாபியில் இருக்கும் இமான், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

எகிப்தில் இருந்து கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் இமான். அவருக்கு 'பேரியாட்ரிக் சர்ஜரி' (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 250 கிலோ வரை எடை குறைந்தார் இமான். இமானுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சை வெற்றியடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இமானின் சகோதரி ஷைமா செலீம், மருத்துவமனையின் சிகிச்சையில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக புகார் தெரிவித்தார். தன் சகோதரியின் உடல்நிலை, எடை குறைப்புக்குப் பிறகு மிகவும் மோசமடைந்துவிட்டதாக ஒரு வீடியோ பதிவை, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி விமானம்மூலம் இந்தியாவில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கிளம்பினார் இமான். தொடர்ந்து உடல்நிலையில் பிரச்னைகள் இருந்துவந்ததால், அபுதாபியில் இருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலி, சிறுநீரகத் தொற்று, படுக்கைப் புண் உள்பட பல பிரச்னைகளால் இமான் அவதிப்பட்டுவருவதாகவும்  அவருக்குத் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.