Published:Updated:

உச்சத்தில் பிட்காயின்: முதன்முறையாக 1600 டாலர் மதிப்பினை எட்டியது!

உச்சத்தில் பிட்காயின்: முதன்முறையாக 1600 டாலர் மதிப்பினை எட்டியது!
உச்சத்தில் பிட்காயின்: முதன்முறையாக 1600 டாலர் மதிப்பினை எட்டியது!

’பிட்காயின்’ என்னும் வர்ச்சுவல் பணத்தின் மதிப்பு கடந்த ஒரு மாதமாகவே ஏற்றத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது இதன் மதிப்பு முதன்முறையாக 1600 டாலராக உயர்ந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் மதிப்பு 4000 டாலர்கள் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


உலகின் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத ஒரு மறைமுகப் பணம் தான் பிட்காயின். பியர்-டு-பியர் கம்ப்யூட்டிங் என்ற டெக்னிக்கின் மூலமாக இதில் பணப்பறிமாற்றமாக இல்லாமல் பண்டமாற்று முறையில் இந்த பிட்காயினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பிட்காயினின் மதிப்பு முதலில் 2009-ல் ஆரம்பிக்கப்பட்டபோது, 25 டாலராக இருந்தது, தற்போது 1600 டாலராக உயர்ந்துள்ளது.

வருங்காலத்தில் இது 4000 டாலர் வரை உயரும் எனக் கூறப்படுவது உலகில் பிட்காயினுக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது. மதிப்பே இல்லாமல் இம்மாதிரியான ஆன்-லைன் வர்த்தக பரிமாற்றங்கள் எடுபடாது என உலக நாடுகள் கருதி வந்த வேளையில் அதிகப்படியான முதலீட்டாளர்களை இழுத்து முன்னேறிக்கொண்டு வருகிறது பிட்காயின்.