Published:Updated:

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠
பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பெண் எம்.பி ஒருவர் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செய்தி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி எந்த பாராளுமன்ற பெண் உறுப்பினரும் ஆஸ்திரேலிய வரலாற்றில் தன் குழந்தைக்கு பாராளுமன்றத்தினுள் தாய்ப்பால் கொடுத்தது இல்லை.

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் மேல்சபையில் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம் தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை கொடுப்பதில் லாரிசாவுக்கு துளியும் விருப்பமில்லை.
 

எனவே, தன் குழந்தையையும் தன்னுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து சென்றுவிட்டார் லாரிசா. அங்கு பாராளுமன்ற நிகழ்வின்போதே தன் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றினார். இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாய்ப்பால் குடித்த முதல் குழந்தை என் மகள் அலியா என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்! வரலாற்றையே மாற்றிய எம்.பி⁠⁠⁠

கடந்த ஆண்டு திருத்தப்பட்ட விதிகளின்படி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு