Published:Updated:

மாலத்தீவு: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலியான சோகம்!

தீ விபத்து

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மாலத்தீவு: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் பலியான சோகம்!

மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Published:Updated:
தீ விபத்து

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மாலத்தீவின் தலைநகர் மாலேவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைதளத்தில், வாகனம் நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த தீ குடியிருப்பு முழுவதும் மளமளவென பரவியதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது.

தீ விபத்து
தீ விபத்து
ட்விட்டர்

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மீட்புப்படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்பு மீட்புப்பணியினர் செய்தியாளர்களிடம், ``நாங்கள் 10 உடல்களை இதுவரை மீட்டிருக்கிறோம். மேலும், தீவிரமாக மீட்புப்பணியை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.

உயர் சந்தை பகுதியான இந்த மாலே, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.