Published:Updated:

இலங்கையில் மிகமோசமான வெள்ளம்; இரண்டு கப்பலில் இந்தியா நிவாரணம் 

MUTHUKRISHNAN S
இலங்கையில் மிகமோசமான வெள்ளம்; இரண்டு கப்பலில் இந்தியா நிவாரணம் 
இலங்கையில் மிகமோசமான வெள்ளம்; இரண்டு கப்பலில் இந்தியா நிவாரணம் 

இலங்கையில் தென்மேற்குப் பருவமழை காலத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இலங்கையில் மிகமோசமான வெள்ளம்; இரண்டு கப்பலில் இந்தியா நிவாரணம் 


மீட்புப் பணியில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் உதவியையும் அந்நாடு கேட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய இரண்டு கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தகவலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. தேவைப்படும் இந்த நேரத்தில் நாங்கள் இலங்கை சகோதர, சகோதரிகளுக்குத் துணையாக நிற்கிறோம். நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்குக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கையில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிகமோசமான வெள்ளம் இது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 ஆயிரம் வீடுகள் அழிந்தன. பல நூறு பேர் பலியானார்கள்.